search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் நடப்பாண்டு சிறப்பு பட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 22-ந் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு நவம்பர் 31-ந் தேதி வரையிலும் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.487, மக்காச்சோளத்திற்கு ரூ.296, பருத்தி பயிருக்கு ரூ.484 தொகையினை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மட்டும் தேசிய மயமாக்க ப்பட்ட வங்கிகளில் செலுத்தி பதிவு செய்யலாம்.

    பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை ரிஷிவந்தியம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ரேஷ்மா தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த வர் முருகன் (வயது 36). கூலித் தொழிலாளி. இவரது மகள் ரேஷ்மா சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது மகளை அழைத்து வர பிரிதிவிமங்கலத்தில் இருந்து மூரார்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தேரிப்பட்டு அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்தில் இறந்து போனார்.

    தகவல் அறிந்த தியாகதுரு கம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து முருகன் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரை வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விடு முறைக்காக தனது மகளை அழைத்து வர சென்ற தந்தை விபத்தில் இறந்து போன சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றாகும்.
    • கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்ட மாகும். நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றா கும். அடுத்த தலைமுறை களுக்கு கல்வி என்பது இன்றியமையாததாகும். தமிழ்நாடு முதலமைச்சர் இளம் தலைமுறையி னர்கள்அதிக அளவில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர வேண்டும் என்ப தற்காக புதுமைப்பெண் திட்டம் அறிவித்து மாணவி களின் வங்கிகணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தி வருகிறார். இளைஞர்கள் படித்த பின் வேலை கிடைக்க வேண்டும் என்ப தால் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் உயர்கல்வி தொடர முடி யாத நிலையில் உள்ள மாண வர்களுக்காக இந்த கல்விகடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 38 கல்லூரி கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பயிலும் மாணவ, மாணவி களுக்கு கல்வி கடன் பெறுவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கல்வி கடன் வழங்குவதற்கான மாபெரும் முகாம் நடத்தப் பட்டது. கல்வி மிகவும் இன்றியமையாத தாகும் எனவே மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கல்வி கடன் முகாமில், சுமார் 472 மாணவ, மாணவி களுக்கு ரூ.17.35 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் வழங்கப் பட்டது. இம்முகாமில் துர்காதேவி என்ற மாணவி யின்கல்வி கடன் விண்ணப் பம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சில காரணங்களால் மறுக்கப் பட்டதாக அறிந்த மாவட்ட கலெக்டர் இந்தி யன் வங்கியின் வாயி லாக ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன்கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், கடலூர்மண்டல இந்தியன் வங்கி மேலாளர் கவுரிசங்கர் ராவ், சேலம் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமேலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கள்ளக்குறிச்சி வருவாய் தாசில்தார் பிரபா கரன், வருவாய் துறை அல வலர்கள், வங்கிமேலா ளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர்கல்யாணி .ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் பெரியசாமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நிலையில் கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கல்யாணி யுடன் அவரது தாய் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்யாணி மற்றும் அவரது மருமகன் ஆகியோர் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் வயதான கல்யாணியின் தாய் மட்டும் இருந்துள்ளார் .அப்போது கல்யாணி வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த கல்யாணியின் தாயிடம் வீட்டில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் வந்த பிறகு வந்து பாருங்கள் என்று சொல்லி உள்ளார் பின்னர் மூதாட்டிக்கு தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை உடைத்து 12 ஆயிரம் பணம் மற்றும்3 பவுன் தங்க நகை உள்ளிட்ட வற்றை திருடி சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று மாலை கல்யாணியின் மருமகன் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார் .

    பின்னர் இதுகுறித்து சின்னசேலம் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .இதே போல் இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இரு இடங்களில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கானாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது53) தொழிலாளி. இவரது மகன் வெங்கடகிருஷ்ணன் (24). கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வெங்கடகிருஷ்ணன் தனது தந்தை ராமஜெயத்தை தட்டி கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமஜெயம் அங்கிருந்த கத்தியால் தனது மகன் வெங்கடகிருஷ்ணனை சரமாரியாக தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து ராமஜெயத்தை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    நாகேசை மிரட்டியவர் தியாகதுருகம் அருகே வேங்கைவாடியை சேர்ந்த குருசாமி மகன் தேவர் (27) என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 63). இவரது செல்போனுக்கு கடந்த 12-ந் தேதி புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய நபர், வரஞ்சரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி, நாகேஷை உடனடியாக போலீஸ் நிலையம் வரச்சொல்லி கூறியுள்ளார்.நான் என்ன தவறு செய்தேன், எதற்கு என்னை அழைக்கிறீர்கள் என்று நாகேஷ் கேட்டுள்ளார். தொரைக்கு எல்லாத்தையும் போன்லையே சொல்லனுமா, கிளம்பி வா சொல்கிறேன் என்று எதிர்தரப்பில் பேசியவர் மிரட்டும் தோணியில் கூறினார்.இதையடுத்து நடந்த சம்பவங்களை தனது உறவினர்களிடம் நாகேஷ் கூறினார். அவர்களின் உதவியுடன் வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினர். தான் ஏதும் பேசவில்லையே, யாரோ உங்களை மிரட்டியுள்ளனர். மீண்டும் போன் வந்தால் உடனடியாக என்னிடம் வாருங்கள், அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

    இதனால் நிம்மதியடைந்த நாகேஷ் தனது பணிகளை தொடர்ந்தார். மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய அதே மர்மநபர் போலீஸ் நிலையம் வரவில்லை என்றால், நேரில் வந்து முகத்தை உடைத்து விடுவேன் என்று மீண்டும் மீண்டும் மிரட்டினார்.இது தொடர்பாக வரஞ்சரம் போலீசாரிடம் நாகேஷ் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாகேசை மிரட்டியவர் தியாகதுருகம் அருகே வேங்கைவாடியை சேர்ந்த குருசாமி மகன் தேவர் (27) என்பது தெரியவந்தது. இவருக்கும் நாகேசுக்கும் முன்விரோதம் இருந்ததும், இதனால் தேவர், நாகேஷை செல்போனில் மிரட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்து மஞ்சபுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் கட்ட சிலர் முடிவு செய்தனர். இதற்கான பணத்தை தயார் செய்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் சிலருடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்தார். இதில் அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (40) உட்பட 11 பேர் பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் பெரியசாமி இடம் கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏழுமலை, சதீஷ்குமார் (24), கலியமூர்த்தி (28) ஆகியோர் மணிகண்டனை திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ஏழுமலை, சதீஷ்குமார், கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெரிய சாமியை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்லமுத்து (வயது 35). கடந்த 12-ந் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி (20) உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது குறித்து தட்டி கேட்ட அண்ணாமலை என்பவரை பூபதி தரப்பினர் தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்கச் சென்ற செல்லமுத்து மற்றும் சிலரை பூபதி தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பூபதி, கண்ணு மகன் சுப்ரமணியன், ஏழுமலை மகன் வெங்கடேசன், வேலு மகன் கோவிந்தராஜ் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 57) விவசாயி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வேலு என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரன் தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மாரியம்மன் கோவில் தெரு அருகே வந்தபோது வேலு, அவரது மனைவி அய்யம்மாள், மகன் விஜி மற்றும் உறவினர் கேசவேலு ஆகியோர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி (50) ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த ராமச்சந்திரன் மற்றும் வளர்மதி ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து ராமச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வேலு, அய்யம்மாள், விஜி மற்றும் கேசவேலு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை யில் இருந்து கோபிசெட்டி பாளையத்திற்கு சென்று கொண்டிருந்த ஸ்கார்ப்பி யோகார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகரை சேர்ந்த வர் ராஜேஷ் (வயது 28). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பேக்கரி யில் மாஸ்டராக பணி யாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எலவனா சூர்கோட்டை அருகேயுள்ள கீரப்பாளையம் மேம்பாலம் அருகே சென்று கொண்டி ருந்தார்.அப்போது சென்னை யில் இருந்து கோபிசெட்டி பாளையத்திற்கு சென்று கொண்டிருந்த ஸ்கார்ப்பி யோகார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த எலவனாசூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசாங்கம் மகன் சுபாஷ் சந்திரபோஸ்
    • தியாகதுருகத்தில் இருந்து குன்னியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரசாங்கம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 22) இவர் சம்பவத்தன்று தியாகதுருகத்தில் இருந்து குன்னியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேட்டை தெரு பகுதியில் சென்றபோது. இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்கள் மோதியது சம்பந்தமாக முதியவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்று ஏன் முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என சுபாஷ் சந்திரபோஸ் கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பேட்டை தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விஷ்ணு (20), சிவசண்முகம் மகன் விக்கி (19), சீனிவாசன் மகன் அருண்குமார் (26) ஆகி யோர் சுபாஷ் சந்திரபோஸை திட்டி, தாக்கினர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு, விக்கி, அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்

    • அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும்
    • குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு,

    கள்ளக்குறிச்சி 14, தியாகதுருகம் 32, கச்சிராயப்பாளையம் 9, கோமுகி அணை 7, மூரார்பாளையம் 9, வடசிறுவலூர் 12, அரியலூர் 12, கடுவனூர் 7, கலையநல்லூர் 25, கீழ்பாடி 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 18, அரியலூர் 12, மணிமுக்தா அணை 17, வானாபுரம் 13, மாடாம்பூண்டி 5, திருக்கோவிலூர் 29, திருப்பாலபந்தல் 7, வேங்கூர் 18, ஆத்தூர் 18, எறையூர் 10, ஊ.கீரனூர் 35 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 327 மி.மீட்டராக வும், சராசரி 13.62 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.

    ×