search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பணிமனை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழரசன் வழங்கிய பயணச்சீட்டு, திருடு போன பயணச்சீட்டு என தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை நடைபெற்றது. இதில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டுகள் திருட்டு போனது தெரியவந்தது. தொடர்ந்து திருட்டு போன பயணச்சீட்டுகளின் எண்களைக் கண்டறிந்து போக்குவரத்து துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி விழுப்புரத்தில் அரசு பஸ்சில் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர்கள் பயணச்சீட்டை சோதனை செய்தனர். அந்த பஸ்சின் கண்டக்டர் தமிழரசன் வழங்கிய பயணச்சீட்டு, திருடு போன பயணச்சீட்டு என தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி பணிமனை மேலாளர் முருகன், கண்டக்டர் தமிழரசனிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர் பயணச்சீட்டுகளை திருடியதை ஒப்புக்கொண்டார். திருட்டு போன பயணச்சீட்டுகளின் மொத்தமதிப்பு ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 ஆகும்.

    இதனை தொடர்ந்து பணிமனை மேலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கண்டக்டர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்க்கும் கண்டக்டரே பயணச்சீட்டுகளை திருடி அரசு பஸ் பயணிகளிடம் வழங்கிய சம்பவம் பணிமனை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பகண்டை கூட்டு ரோட்டில் நடந்த விபத்தில் கார் மரத்தில் மோதி டிரைவர் பலியானார்.
    • கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கண்டாச்சிபுரத்தை அடுத்த குடமரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). டிரைவர். இவர் காரில் பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புதூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • தீயை அணைக்க முயன்றனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பெரிய மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைவாணி (வயது 38). இவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென பரவியதால் அணைக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்த னர்.

    இதேபோல் தியாகதுருகம் அருகே பீளமேடு காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (45) மற்றும் திம்மலை கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (47) ஆகி யோரது கூரை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்த னர். பெரியமாம்பட்டு, பீள மேடு காட்டுக்கொட்டாய், திம்மலை ஆகிய 3 தீ விபத்துகளும் மின்கசிவின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றதால் அதிக சேதம் ஏற்படுவதற்குள் தீயை அணைத்தனர். தீ விபத்தால் 3 வீடுகளின் சேதம் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு
    • மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 51). இவர் தனது மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை சென்று வீடு திரும்பினார். பாதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த தங்கராசு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    ஆசனூர் அருகேயுள்ள காய்ச்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (70). இவர் இன்று அதிகாலை வயலுக்கு நடந்து சென்றார். அவ்வழியே வந்த அடை யாளம் தெரியாத வாகனம் இவர் மோதி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி இறந்து கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் எடக்கல் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமை யிலான போலீசார் விரைந்து சென்றனர். ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, செயல் அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் ஆகி யோர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க உத்தர விட்டனர். அதன்படி கொசு புழு ஒழிப்பு பணியா ளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வார்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலை யில் பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இதில் சேலம் மெயின் ரோடு, பஸ் நிலையம், திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    • செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.
    • அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள பழைய வேங்கூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மனைவி ஆனந்தநாயகி (வயது 50). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.

    அப்போது பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆனந்தநாயகியை பார்த்து ஓசியில் பஸ் ஏற வந்துட்டியா, பஸ்சை விட்டு கீழே இறங்கு என அசிங்கமாக பேசியதோடு ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆனந்தநாயகி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது.
    • உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 37). இவரது தந்தை சுப்பிரமணியன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி இறந்து விட்டார். இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது. இதனை சங்கராபுரம் தாலுக்கா அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகியோர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுப்பிரமணியன் உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
    • பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி பூங்குழலி (வயது 37) இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அசகளத்தூர் பகுதியைச் சேர்ந்த குரு மகன் ரமேஷ் (25) வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் வங்கி வேலை நேரம் முடிந்து விட்டது. நாளைக்கு வந்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

    பின்பு வேலை நேரம் முடிந்து வங்கி துணை மேலாளர் பூங்குழலி மற்றும் கல்விக்கரசி ஆகியோர் பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் இவர்களை வழிமறித்த ரமேஷ் இருவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து துணை மேலாளர் பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

    • 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.
    • மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆம் நிதியாண்டில் சுய தொழில் தொடங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூ.3 கோடியே 55 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில்தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ,அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி க்குறிப்பில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
    • கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டனந்தல் என்ற கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் முறை யாக வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை காட்டணந்தல் கிராம மக்கள் தங்கள் ஊரில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரியூர் கிராமம் செல்லக் கூடிய அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பழனி வேல், ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், கிராம ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, மற்றும் சின்ன சேலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காட்டனந்தல் கிராமத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.

    • நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
    • தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதாக கூறினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர் சிறப்பு முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலாளர் திலீப் வரவேற்பு உரையாற்றினார். நகராட்சி ஆணையர் இளவரசன்,வக்கீல் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிபதி விக்னேஷ் பிரபு ஆகியோர் துப்புரவு முகாமை தொடக்கி வைத்தனர்.

    நீதிபதிகள் ஸ்ரீராம், விக்னேஷ் பிரபு ஆகியோர் மூத்த பெண் தூய்மை பணியாளர் உமாபதி என்பவரை அமர வைத்து அவருடைய கால்களை கழுவி பொட்டு வைத்து பாத பூஜை செய்து தூய்மைக்கு முழு காரணமாக உள்ள உங்களை போன்ற தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதாக கூறினர். முன்னதாக தூய்மை பணியின் அவசியம் குறித்து உறுதிமொழி அனைவரும் ஏற்றுக் கொண்டினர். முகாமில் அரசு வக்கீல்கள் வெங்கடேசன், இளமுருகன், ஜான்சி ராணி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

    • வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியாபாரிகளும் வருவார்கள்.
    • இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் வாரந் தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறு வது வழக்கம். ரம்ஜான் பக்ரீத் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டி கை நாட்களில் ஆடுகள் அதிக அளவில் விற்பனை யாவது வழக்கம். இதில் கள்ளக்குறிச்சி மட்டும் இல்லாமல் வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியா பாரிகளும் வருவார்கள். இந்த நிலை யில் வருகின்றதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு கிராமங்க ளில் மாவட்டங்களில் இருந் தும் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இன்று நடைபெற்ற வார சந்தையில் ஒரே நாளில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாது.

    ×