என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தியாகதுருகத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, செயல் அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் ஆகி யோர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க உத்தர விட்டனர். அதன்படி கொசு புழு ஒழிப்பு பணியா ளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வார்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலை யில் பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இதில் சேலம் மெயின் ரோடு, பஸ் நிலையம், திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.