என் மலர்
கள்ளக்குறிச்சி
- வட்டார மருத்துவ அலுவலர் செல்வி தலைமையில் பஞ்சாயத்து மன்றம் அருகில் மருத்துவமுகாம் நடைபெற்றது.
- மருத்துவக் குழுவினர் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செல்வி தலைமையில் பஞ்சாயத்து மன்றம் அருகில் மருத்துவமுகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
இதில் வட்டார பூச்சியியல் வல்லுநர்கள் சுப்ரமணி, மகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக கொசுப்பழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமம் முழுவதும் பிளிச்சிங் பவுடர் போடப்பட்டது.
- சங்கராபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது70) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யம்பெருமாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பெரியநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது41)கூலி தொழிலாளி.
- இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பெரியநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது41)கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவா மாநிலத்துக்கு வேலைக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ஆரூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சரவணன்(வயது27) என்பவர் வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- சென்னையில் கூலி வேலை செய்து வந்த மாயக்கண்ணன், யமுனாவை கடந்த 22-ந்தேதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார்.
- இது குறித்து யமுனாவின் தந்தை மாயக்கண்ணன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகள் யமுனா (வயது 20). இவருக்கும் பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வைரவேல் (27) என்பவருக்கும் கடந்த ஒன்னரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று. இவர்கள் பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். வைரவேல் சேலம் மாவட்டம் தலைவாசலில் வெல்டிங் வேலை செய்து வருவதால் வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சென்னையில் கூலி வேலை செய்து வந்த மாயக்கண்ணன், யமுனாவை கடந்த 22-ந்தேதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் போனை எடுக்காததால், வைரவேலை தொடர்பு கொண்டு பேசினார். நான் விடுமுறையில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். அங்கு சென்றவுடன் உங்களுக்கு போன் செய்கிறேன் என்று வைரவேல் கூறியுள்ளார்.
நேற்று காலை வீட்டிற்கு சென்று வைரவேல் பார்த்த பொழுது, கதவின் உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த வைரவேல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு பார்த்த பொழுது யமுனா ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த வைரவேல், இது குறித்து யமுனாவின் தந்தை மாயக்கண்ணன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் யமுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யமுனாவை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒன்னரை வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோக த்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.
- சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் முருகன் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். மேலும், வீட்டின் வாசலை சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுத் தருவதாக, சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தினார். சுதாரித்துக் கொண்ட சிறுமி கூச்சலிட்டார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வீட்டிற்குள் சென்று சிறுமியை மீட்டனர். கூலித் தொழிலாளி முருகனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஓப்படைத்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சங்கராபுரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
- தினேஷினை சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாவ ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தினேஷ் (வயது 28). இவர் சம்ப வத்தன்று வீட்டிலிருந்து வெளியே வந்தபோது வீட்டின் முன்புறம் உள்ள கழிவு நீர் கால்வாயில் கால் தவறி விழுந்தார்.
பலத்த காயமடைந்த தினேஷினை சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 75) என்பவர் வீட்டின் அருகே பிளாஸ்டிக் குடத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர்.
- தலைமறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.
கள்ளக்குறிச்சி,அக்.22-
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா. ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுருநாதன் (வயது 61). விவசாயி. இவருக்கு தியாக துருகம் அருகே அசகளத்தூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் ஜா.ஏந்தல் பகுதி யைச் சேர்ந்த பெரியசாமி (40), மணிகண்டன் (41) அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (55), ராஜேந்திரன் (46) ஆகியோ ரை தனது விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். வேலை முடிந்ததும் அனை வரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜகுருநாதன் மின் மோட்டாரில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துச் சென்று அருகில் உள்ள மயூரா ஆற்றில் மின்சாரம் செலுத்தி 5 பேரும் மீன்பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி யதில் பெரியசாமி கீழே கல்லின் மீது விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக கூறப்படு கிறது.
இதனைத் தொடர்ந்து ராஜகுருநாதன், மணி கண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர். மீண்டும் நள்ளிரவில் ராஜகுருநாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மயூரா ஆற்றிற்கு சென்று அங்கு முட்புதரில் மறைய வைத்திருந்த பெரியசாமி யின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவே உட்கார வைத்துக்கொண்டு சென்றனர். ராஜகுருநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து கொண்டு உடலை பிடித்துக் கொண்டு அசகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உடலை போட்டுவிட்டு சென்று விட்டனர். இறந்து கிடந்த பெரிய சாமி யின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பெரிய சாமியின் உடலை கைப்பற்றி கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை செய்ததில் ராஜகுரு நாதன் நிலத்திற்கு விவசாய வேலைக்கு ஆட்களை அழைத்து சென்றதும். வேலை முடிந்ததும் ஆற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் போது இறந்து போனதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியசாமி மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் காமராஜ், ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய 3- பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.
- வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து 10 பவுன் நகையை திருடிச் கொண்டு தப்பிவிட்டார்.
- இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்டிபன்ராஜ். தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 27). வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவ்வழியே பிச்சை எடுத்து வந்த பெண்கள், ஜெனிபரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து பெண்களுக்கு கொடுத்த நேரத்தில், அதே கும்பலை சேர்ந்த மற்றொரு பெண், வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து 10 பவுன் நகையை திருடிச் கொண்டு தப்பிவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் வந்து பார்த்த ஜெனிபர், பீரோ திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிலிருந்த 10 பவுன் நகை கொள்ளைபோன விஷயத்தை அக்கம் பக்கத்தினரிடம் கூறினார்.
இதையடுத்து பிச்சை எடுப்பது போல வந்த பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பக்கத்து தெருவில் நடுந்து சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே சென்றவர்களின் உதவியுடன் 5 பெண்களை மடக்கிப்பிடித்த ஜெனிபர், அவர்கனை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தார். அவர்களிடமிருந்த 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் இந்த பெண்கள், ஊர் ஊராக சென்று பிச்சை எடுப்பது போல நடித்து, தனியாக உள்ள பெண்களிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் வீட்டில் கொள்ளையடிப்பதை தொழிலாக செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், ஈரோட்டை சேர்ந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட 5 பெண்களும், அய்யப்பன் மனைவி முத்தம்மாள் (36), கோபால் மனைவி மீனாட்சி (30), ஜீவா மனைவி கவிதா (36), சுப்புடு மனைவி மங்கம்மாள் (35), கண்ணன் மனைவி முனியம்மாள் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்தனர்.
ஆனால், இவர்களிடம் தங்களின் பெயர், விலாசம் போன்றவைகளுக்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் இவர்களின் கைரேகைகளை பதிவு செய்வதிலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதிலும் போலீசாருக்கு நடைமுறை சிக்கல்கள் இருந்தது. இதனால் உளுந்தூர்பேட்டை போலீசார் செய்வதறியாது திணறி வருகின்றனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜின் கவனத்திற்கு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உளுந்தூர்பேட்டை போலீசார் வைத்துள்ளனர். அவரின் சிறப்பு அனுமதி கிடைத்தால் மட்டுமே நாடோடி பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கமுடியுமென உளுந்தூர்பேட்டை போலீசார் புலம்பி வருகின்றனர்.
- தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர்.
- இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சின்னசேலம் போலீ சாரிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கி ளை நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர். சந்தேக மடைந்த போலீசார், 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணசீலன் (வயது 28), மாரிமுத்து மகன் கண்ணன் (40), பொன்னுரங்கன் மகன் செந்தில் (39) என்பதும், 3 பேரும் சேர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, சின்னசேலத் தில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் கொள்ளையடித்தது, மூங்கில் பாடியில் உள்ள செறுப்பு கடையில் பணம் திருடியது, நைனார்பாளை யத்தில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் வழிப்பறி செய்தது போன்ற சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசாரை சின்னசேலம் பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.
- அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
- உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ெரயில் நிலையம் தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றினர்.
பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இது கொலையா? அல்லது தற்கொலையா? அல்லது ெரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.