என் மலர்
கள்ளக்குறிச்சி
- அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.
- அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அமுதா (வயது 42) இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (56) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அமுதாவின் நிலத்தில் இருந்த பருத்திச் செடியை, அருணாச்சலம் டிராக்டர் மூலம் உழவு ஓட்டி அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஏன் பயிரை அழித்து டிராக்டரை ஓட்டுகிறீர்கள் என அருணாச்சலத்திடம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அருணாச்சலம் டிராக்டரில் இருந்த கட்டையை எடுத்து அமுதாவின் உறவினர் பாலகிருஷ்ண னை தாக்க முயன்றுள்ளார்.
அப்போது அமுதா தடுக்க முயன்ற போது அவரது தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.
- பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது.
- காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
சென்னையிலிருந்து, ராமநாதபுரத்திற்கு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை ராமநாதபுரத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்து, டிரைவர் மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பஸ்சில் முன்பக்கம் அமர்ந்திருந்த ஒரு சில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
விபத்து நடந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 108 ஆம்புலன்சை வரவழைத்து காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பஸ்சில் வந்த பயணிகளை, மாற்று பஸ்சில் ஏற்றி ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் அருகே உள்ள மட்டிகை கிராமத்தில் செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மர்நபர்கள் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., லாரி போன்றவைகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- 1 டன் மலர்களால் சாமிக்கு அலங்காரம்
- கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத அமாவாசையான நேற்று மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 1 டன் மலர்களால் உற்சவர் பெரியநாயகி அம்மனுடன் விநாயகர் இருப்பது போன்று அலங்கரிக்கப்பட்டு அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமரவைக்க ப்பட்டது. அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- இவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளார்.
- ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ. வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாகண்ணு. இவரது மகன் ரவிச்சந்திரன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வாசுதேவனூர் கிராமத்தில் இருந்து வீ.கூட்ரோடு சென்று மீண்டும் அவரது வீட்டிற்கு செல்ல இவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது பெட்ரோல் டேங்க்கை மூட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியரான அதே கிராமத்தை சேர்ந்த கந்தன் என்பவரது மகன் நல்லதம்பி (வயது 22) என்பவர் இருசக்கர வாகனத்தை முன்னால் தள்ளுமாறு சொல்லி ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.
- பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 114 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை கோரிக்கை நேரில் சந்தித்து மனுக்களாகவும், தகவல்களாகவும் தெரிவிக்க நேரம் மற்றும் பொருட்செலவை குறைக்கும் வகையில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய கோரிக்கையான மின்சாரம், குடிநீர், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை 6381666396 தொலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்பினால் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- விஜய குமார் ஆகியோரைஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் பிரவீன் குமார் (வயது 20) இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏழுமலை என்பவர் ஏன் என்னை திட்டினாய் என பிரவீன் குமாரிடம் கேட்டுள் ளார். தொடர்ந்து ஏழுமலை தனது நண்பர்களான வடிவேல், வீராசாமி மற்றும் மணிராஜ் ஆகியோருடன் சேர்ந்து பிரவீன் குமார், அவரது தாய் அய்யம் மாள், அண்ணன் விஜய குமார் ஆகியோரைஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லேசான காயமடைந்த பிரவீன் குமார், அய்யம்மாள், விஜயகுமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார். இது குறித்து பிரவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ஏழுமலை, வடிவேல், வீரமணி, மணிராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகின்றனர்.
- கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார்.
- கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சங்கரி வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
- நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சவுந்தர்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் மோகன சங்கரி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மேல் பட்டப்ப டிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் வெங்கடேசன் (22) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடை வில் வெங்கடேசனின் நடவடி க்கை பிடிக்காததால் அவரிடமி ருந்து மோகனசங்கரி விலகி னார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த வெங்கடேசன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நெட்டில் விட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகனசங்கரி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
- போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் வனப்ப குதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்காக சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கெடார் பட்டிவளவு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அதனை பதுக்கி வைத்த வர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது.
- சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லை க்குட்பட்ட கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை யில் நல்லாத்தூர் பெட்ரோல் பங்க் - தனியார் பள்ளிக்கு இடையே இடையே இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இங்குள்ள புளிய மரத்தின் பின்புறம் மறைந்து நிற்கும் மர்ம நபர்கள் சாலைக்கு வந்து கையை காட்டி வாகனத்தை நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகளை திசை திருப்பி, அவர்களை தாக்கி பணம், பொருள் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் வழிப்பறி நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி-கச்சிரா யபாளையம் சாலையில் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணிக்குள் மர்ம நபர்களின் கைவரிசை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த சாலையில் ரோந்து பணிக்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் வழிப்பறி சம்பவங்களை தடுத்து, பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- 123 பேர் கைது
- சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம்
கள்ளக்குறிச்சி:
சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. வினர் அறிவித்து இருந்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிடுவதற்காக திரண்டு வந்தனர்.
இதற்கு மாவட்டத் தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாவட்ட துணைத் தலைவர் சர்தார் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது 123 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்பு மாலையில் அனைவரையும் விடுவிக்கப்பட்டனர்.