search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவு ள்ளது.
    • தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 26-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவு ள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் பெண் வேலைநாடுநர்கள் 2021, 2022 மற்றும் 2023 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளோமோ தேர்ச்சி பெற்று, 18 முதல் 22 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தகுதியுடைய பெண் வேலைநாடுநர்கள் அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ள பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும் இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பயிற்சி காலம் முடிவு பெற்ற பின் நிரந்தர பணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை பெற முடியும். மேலும், பயிற்சி காலத்தில் 12-ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.12,300 டிப்ளோமா முடித்தவர்களு க்கு ரூ.13,400 மாத ஊதியமும், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.
    • 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது,

    1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்ட ச்சத்து நிலைபாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தினை அறிவித்து செயல்படு த்தினார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை வட்டாரத்திற்குட்ப ட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 638 அரசுப்பள்ளிகளில் வருகின்ற 25-ந்தேதி முதல் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    இத்திட்டம் விரிவுபடுத்துவதற்கான முன்னோட்டமாக தியாகது ருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் (பெண்கள்) நடத்தப்பட்டது. காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு சமைக்கப்பட்டு சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டு மென தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலை வர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ரமேஷ் தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
    • மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஏழுமலைகவுன்டர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36) டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குருபீடபுரம் கூந்தலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிகொண்டு மீண்டும் கம்பெனிக்கு வந்தார்.

    அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க டோர் சரியாக மூட வில்லை. இதனால் டிப்பர் லாரியின் பின்புற கதவை தூக்கும்போது மேலே சென்ற மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து எடைக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யப்பனும், செங்கல் சூளை உரிமையாளர் விஜியும் யால் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிவேல் (31) என்பவரிடம் பாக்கி பணம் கேட்டுள்ளனர்.
    • நீ எதற்காக பணம் கேட்கிறாய் என்று கூறி அய்யப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(44). செங்கல் சூளை தொழிலாளி. சம்பவத்தன்று அய்யப்பனும், செங்கல் சூளை உரிமையாளர் விஜியும் யால் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிவேல் (31) என்பவரிடம் பாக்கி பணம் கேட்டுள்ளனர். அப்போது மணிவேல் ஆத்திரமடைந்து, நீ எதற்காக பணம் கேட்கிறாய் என்று கூறி அய்யப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அம்மாகண்ணு(80). இவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து வந்து சாலையை கடக்க முயன்ற போது பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பகண்டை கூட்டு ரோடுசப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த உலகிய நல்லூர்கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, லெட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது.இன்று காலை 4ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து, சிவாச்சாரியர்கள் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 150 வருடங்களுக்கு பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றதால் உலகிய நல்லூர் சுற்றியுள்ள கிராமங்களான ஈசாந்தை, நாட்டார்மங்கலம், அமகளத்தூர், கருங்குழி ,நயினார் பாளையம், மாங்குளம், அனுமந்தல் குப்பம், செம்பாக்குறிச்சி, ராயர் பாளையம், பெத்தானூர், சின்னசேலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை வாங்கிச் சென்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது. சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அபித்குமார் (வயது 19) இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்த பெற்றோர், தன் மகனின் சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.

    இந்நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து உண்மையை விசாரித்து பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமாரை விசாரணை அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நியமித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சம்பந்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், விடுதி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வினிஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையத்திலிருந்து பழைய சிறுவங்கூர் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
    • வினிஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூகாஸ் மகன் வினிஷ்குமார்(20). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையத்திலிருந்து பழையசிறுவங்கூர் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். பழையசிறு வங்கூர் அருகே சென்று கொண்டி ருந்தபோது, தியாகதுருகத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி எதிரே வந்த சரக்கு வாகனம் அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் படுகாய மடைந்த வினிஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெ க்டர் சூர்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினிஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர செயலாளர் சுப்பராயலு, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஒன்றிய குழு சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது30) என்பவர் அவரது வீட்டில் சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று, அதேபகுதியை சேர்ந்த சக்திவேல்(24) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
    • பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட த்திற்கான விண்ண ப்பப்பதிவு முகாம்கள் ஜூலை 24-ந் தேதி தொடங்கப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 766 நியாயவிலை கடைகளில் உள்ள 4,34,663 குடும்ப அட்டைகளில், முதற்கட்டமாக ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 5 முதல் 14-ந் தேதி வரையும் 3,75,613 குடும்ப அட்டையை சேர்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படு த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    ×