என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சல் அருகே இந்தோனேசியா காதல் மனைவி- போதகரை சிறை வைத்த உறவினர்கள்
- இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம்
- போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்ததையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்.
நாகர்கோவில்:
குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனே சியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், போதகரின் உறவினர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போத கரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர்.
இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர்.
மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்