என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் இருந்து தவறி விழுந்து ஆசிரியை காயம்
    X

    தலையில் படுகாயம் அடைந்த ஆசிரியை

    பஸ்சில் இருந்து தவறி விழுந்து ஆசிரியை காயம்

    • நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற டிரைவர் மீது வழக்கு
    • பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை

    கன்னியாகுமரி:

    தமிழக அரசு மகளிர் பயன் பெறும் வகையில் இலவச பஸ் சேவையை இயக்கி வருகிறது. இந்த பஸ்சை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த பஸ்கள் நிறுத்தங்களில் நிற்பதில்லை, கண்டக்டர்கள், இலவச பய ணம் என்பதால் பெண்களை சரியாக மதிப்பதில்லை என பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பஸ்சில் ஏற முயன்றபோது ஆசிரியை ஒருவர் தவறி கீேழ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் சென்ற அரசு பஸ், திருவட்டார் அருகே உள்ள புலியிறங்கி பகுதி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் சென்று நின்றது. இதனால் ஓடி சென்று ஏற முயன்ற தனியார் பள்ளி ஆசிரியை மேரி கிளாட்லின், படிக்கட்டில் கால் வைத்த போது தவறி விழுந்து காயம் அடைந்தார்.

    அவரை அந்த பகுதி யில் நின்ற மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் காயமடைந்த ஆசிரியை மேரி கிளாட்லின் ஆவேச மடைந்து இலவச பேருந்து நாங்கள் கேட்கவில்லை, பெரும்பாலான பேருந்துகள் பெண்கள் நின்றால் பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.

    நிறுத்தத்தை தாண்டி நிறுத்திய பேருந்தில் ஏற முயன்ற போது தான் எனக்கு உடம்பு முழுவதும் காயமும் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் அங்கு நின்று அழுதபடி கூறினார். இது தொடர்பாக அவர் சம்மந்தப்பட்ட பணிமனை யிலும் புகார் அளித்தார்.

    திருவட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட பஸ் திருவட்டார் பணிமனையை சேர்ந்தது என தெரியவந்தது. பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டாறு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சரியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்றும் தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளி கல்லூரிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்களும் காத்து நின்றால் பஸ்கள் வருவதில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வெகு தூரம் நடந்து சென்று மாற்று இடத்தில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×