என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி உடலில் சூடு வைத்த தாய்
கன்னியாகுமரி:
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆரோக்கிய ஆஸ்மி. இவர்களது 12 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தி, வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைப்பாராம். சில நேரங்களில் உடலில் சூடு வைத்து தலையில் அடிப்பாராம். சிறுமியின் தலையில் தையல் போட்ட தழும்பு உள்ளது.
இந்த தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மகளிர் சப் - இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி சிறுமியை கொடுமைப்ப டுத்தியதாக தாய் ஆரோக்கிய ஆஸ்மி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
தற்போது சிறுமியின் தந்தை மரிய ரூபன் ஊர் திரும்பி உள்ளார். பெற்ற மகளை சூடு வைத்து துன்புறுத்திய தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.