என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் உலக தொழில் வர்த்தக கருத்தரங்கம் நடந்தபோது எடுத்த படம்.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் உலக தொழில் வர்த்தக கருத்தரங்கம்

- சிங்கப்பூர், மலேசிய பிரதிநிதிகள் பங்கேற்பு
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் உலக தொழில் வர்த்தக கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ராபர்ட் வின்சென்ட் எட்வர்ட் தலைமை தாங்கினார். செய லாளர் பைஜூ நிஷித் பால், கருத்தரங்க ஒருங் கிணைப்பு செயலாளர் ஜெயசேகர், ராஜாக்க மங்கலம் கடல் வாழ் உயிரின ஆய்வு மைய ஒருங்கிணைப்பு நிர்வாகி பிரின்ஸ் கிளாட்சன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் மலே சியா மற்றும் சிங்கப் பூரை சேர்ந்த தொழில் முனைவோர், விஞ்ஞானி கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்லூ ரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னாள் மீன்துறை இயக்குனர் பால்பாண்டியன், கடல் வாழ் உயிரின ஆய்வு மைய முன்னாள் துறை தலைவர் பேராசிரியர் லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலேசியா மற்றும் சிங் கப்பூரில் இருந்து வருகை தந்த நிபுணர்கள் அசீசா ஜலாலுதீன், அய்யப்பதாஸ், டடின் மல்லிகா சுப்பிரம ணியம், காண்டைஸ் செங், யோகேஸ்வரி, ஜூலியா லிம் உள்ளிட்டோர் கருத்த ரங்கில் கலந்து கொண்டு பேசினர்.
கருத்தரங்கு குறித்து ராஜாக்கமங்கலத்தில் உள்ள கடல்வாழ் உயிரின ஆய்வு மைய துறை தலைவர் பிரகாஷ் வின் சென்ட் கூறியதாவது:-
இந்திய அளவில் தொழில் வளர்ச்சி இலக்கை பிரதமர் 420 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். அதேபோன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ கத்தில் 85 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் வளர்ச்சி குறியீட்டை நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டும் விதமாக இந்த கருத்தரங்கு நடத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடு களுக்கு இணையாக தமிழகமும் தொழில் வளர்ச்சியில் முன்னுரிமை பெற மாணவ, மாணவி களுக்கு சுய தொழில் களை எவ்வாறு தொடங்குவது, அதில் தற்போதைய புதிய தொழில்நுட்பங்கள் என்ன என்பது போன்ற விவரங்களை தெரிவிப்ப தற்காக இந்த கருத்தரங்கு நடந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.