search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணப்பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ சந்தையில் 100 டன் பூக்கள் விற்பனை
    X

    ஓணப்பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ சந்தையில் 100 டன் பூக்கள் விற்பனை

    • சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ வருகை
    • பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து ரோசப்பூ வருகை

    நாகர்கோவில்:

    மலையாள மொழிபேசும் மக்கள் வாழுகின்ற இடமெல்லாம் நகரத்தை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சத்யா விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம்.

    கேரளாவில் இன்றைக்கு 4-வது நாளாக ஓணம் கொண்டாடப்படுகிறது. அத்தப்பூ கோலம் இட பலவகை மலர்கள் தேவைப்படுவதால் கேரளா வியாபாரிகளும், பொதுமக்களும் தோவாளை சந்தையில் கூடியுள்ளனர். இன்று 100 டன்கள் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகி வருகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பிச்சிபூ ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற பூக்களால் ஆன கோழிப்பூ ரூ. 70 வாடாமல்லி ரூ.200 கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.900, சம்பங்கி ரூ.300, அரணி ரூ. 250, தாமரை ரூ. 6, கொழுந்து ரூ.120, துளசி ரூ. 30 என எல்லா பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம் மாவட்ட நாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பிச்சி பூ, சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கம்பியூட்டர் ரோசப்பூ வாழை, செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து உளுந்து ,பச்சை துளசி, அருகம்புல், தாமரை, தோவாளை சந்தைக்கு வந்து மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் செல்லுகிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஓணத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இதை விட பூக்கள் வரத்து அதிகமாகவும், விலை உயர்வும் காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×