என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாகர்கோவிலில் இன்று 52 பள்ளிகளில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் உறுதிமொழி நாகர்கோவிலில் இன்று 52 பள்ளிகளில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் உறுதிமொழி](https://media.maalaimalar.com/h-upload/2022/07/13/1728660-10.jpg)
நாகர்கோவிலில் இன்று 52 பள்ளிகளில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் உறுதிமொழி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ‘என் குப்பை... என் பொறுப்பு’... என்ற தலைப்பில் பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
- நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வழங்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று மேயர் மகேஷ் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். இது தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
'என் குப்பை... என் பொறுப்பு'... என்ற தலைப்பில் பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 பள்ளிகளில் இன்று மாணவர்களிடம் 'என் குப்பை... என் பொறுப்பு'... என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாகர்கோவில் மாநகரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அரசு பள்ளி, அரசு உதவி பெறும்பள்ளி, தனியார் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குப்பையை தரம் பிடித்து வழங்குவதன் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.