search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பின் 2008 திருவிளக்கு பூஜை
    X

    திருவிளக்குபூஜையில் கலந்துக்கொண்ட ஒரு பகுதியினர்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பின் 2008 திருவிளக்கு பூஜை

    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்
    • வழக்கமாக திருவிளக்கு பூஜையின் போது லட்சதீபவிழாவும் சேர்த்து நடத்தப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆறு ஆண்டுகளுக்குப்பின்னர் நேற்று ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தபெற்ற பெருமாள் கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மிகவும் முக்கியமானது. திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கு முன்புவரை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் சார்பில் ஆண்டு தோறும் 2008 திருவிளக்கு பூஜை நடந்து வந்தது. கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அதன்பின்னர் திருப்பணி நடந்து வந்ததால் ஆறு ஆண்டுகள் திருவிளக்கு பூஜை நடக்கவில்லை.

    கடந்த ஜூலை மாதம் இந்தகோவிலில் 108 ஆண்டுகளுக்கு பிறகு மஹாகும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது அதன்பிறகு தினமும் காலை மாலைவேளைகளில் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துவந்தனர். இந்த ஆண்டு முதல் மீண்டும் திருவிளக்கு பூஜை நடத்த விவேகானந்தா கேந்திராவின் கிராம முன்னேற்ற திட்ட அமைப்பு முன் வந்தது.

    அதன்படி நேற்று மாலை கோவில் பஜனையைத் தொடந்து வெள்ளிமலை சுவாமி சைதன்யா மகராஜ் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் அலங்கார தீபாராதனைக்குப் பின்னர் திருவிளக்கு பூஜை துவங்கியது.

    திருவிளக்கு பூஜையின் போது மாவட்டத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக திருவிளக்கு பூஜையின் போது லட்சதீபவிழாவும் சேர்த்து நடத்தப்படுவது வழக்கம். நேற்று மலையில் அந்த பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மழைகாரணமாக குறைந்த எண்ணிக்கையிலான விளக்குகளே விளக்கணி மாடத்தில் ஏற்றப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகனகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×