என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 875 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் - போலீசார் அதிரடி
- சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே கேரள பயணிகள் ஆட்டோ ஒன்று வந்துள்ளது.
- 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் 875 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் பைபர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் கொல்லங் கோடு இன்ஸ்பெக்டர் ரமா, பயிற்சி சப். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் கொல்லங்கோடு அருகே திருமன்னம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே கேரள பயணிகள் ஆட்டோ ஒன்று வந்துள்ளது.
போலீசார் நிற்பதை பார்த்ததும் டிரைவர் ஆட்டோவை சாலையிலே நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். சந்தேக மடைந்த போலீசார் ஆட்டோவின் அருகே சென்று பார்த்த போது படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் 875 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஆட்டோவையும், மண்ணெண்ணெயையும் பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து பைபர் படகிற்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் எந்த பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல வந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.