என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ராஜாக்கமங்கலம் அருகே அரசு அலுவலக ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்5 Nov 2022 12:52 PM IST
- திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இதனால் லிங்கராஜன் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
- விஷம் குடித்து இருப்பது தெரிய வந்ததும், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் லிங்கராஜன் (வயது 34). இவர், முன்சிறை பகுதியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா.
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இதனால் லிங்கராஜன் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் லிங்கராஜன் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அவர் விஷம் குடித்து இருப்பது தெரிய வந்ததும், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே லிங்கராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X