என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரவிபுதூர்கடை அருகே கடைக்குள் புகுந்த லாரி
- கட்டுபாட்டை இழந்த லாரி அருகிலிருந்த கடைமீது மோதி நின்றது.
- சாலையில் வாகனங்கள் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்துபுரத்திற்கு சிமென்ட் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது லாரியை அமரவிளை பகுதியை சேர்ந்த பெர்னார்டு ஜோசப் (வயது 60) ஓட்டினார்.
இரவிபுதூர்கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது சாலையில் ஒருவர் குறுகே ஒடியுள்ளதாக தெரிகிறது. அவர் மீது லாரி மோதாமல் இருக்க டிரைவர் திடீரென திருப்பியுள்ளார். அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி அருகிலிருந்த கடைமீது மோதி நின்றது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாலையில் சாலையில் வாகனங்கள் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இந்த விபத்து குறித்து தக்கலை போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது