என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடநாட்டு பெண்"திடீர்" சாவு
- ஒருஓட்டலில் அறைஎடுத்து தங்கிஇருந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தார்.
- ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
கன்னியாகுமரி :
மகாராஷ்டிரா மாநிலம் கமலா பார்க் பகர்தூர்வெஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாதவ் தேசாய். இவரது மனைவி தனுஜா தேசாய் என்ற ரோகினிமாதவ்தேசாய் (வயது57)
இவர்தனது உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு கடந்த 29-ந்தேதி சுற்றுலாவந்தார்.அவர்அங்குஉள்ள ஒருஓட்டலில் அறைஎடுத்து தங்கிஇருந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தார்.
இந்த நிலையில் அந்த ஓட்டலில் தங்கி இருந்த போது அவருக்கு நேற்று "திடீர்"என்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.