என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொட்டாரத்தில் ரேஷன் கடை ஊழியர் ஆற்றில் மூழ்கி பலி
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.
- மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 76). இவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரம் சுடுகாடு பக்கம் உள்ள நாஞ்சில் நாடு புத்தன் ஆற்றில் ஆகாயத் தாமரை செடி, கொடி களுக்கு இடையே பிணம் ஒன்று மிதந்து கொண்டி ருந்ததை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.
ஆற்றில் மழை வெள்ளம் அதிக அளவில் கரைபுரண்டு ஓடியதால் அந்த பிணத்தை மீட்க முடியவில்லை. உடனே இதுபற்றி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அந்த பிணத்தை மீட்டனர். அப்போதுதான் ஆற்றில் பிணமாக மிதந்தது கொட்டா ரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள் ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்றில் பிணமாக மிதந்த மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.