என் மலர்
உள்ளூர் செய்திகள்
கருங்கல் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கிய பெண்
- கண் புருவத்தில் காயமடைந்த ஜாண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
- கருங்கல் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி :
கருங்கல் அருகே உள்ள மாங்கரை செவ்வேலி விளையை சேர்ந்தவர் ஜாண் (வயது 55), தனியார் நிறுவன தொழிலாளி. இவரது சகோதரர் சேவியருக்கும் அவரது மனைவி ஹெலன்லதாவு(52)க்கும் இரணியல் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடை பெற்று வருகிறது.
இந்த வழக்கில் சேவி யருக்கு ஆதரவாக ஜாண் செயல்படுவதாக ஹெலன் லதா கருதியதால் முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஜாண் சாலையில் சென்ற போது ஹெலன்லதா தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கல்லால் தாக்கியதாக கருங்கல் போலீசில் புகார் செய்ய ப்பட்டுள்ளது.
இதில் கண் புருவத்தில் காயமடைந்த ஜாண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் ஜாண் தனது வீட்டு காம்பவுண்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஹெலன்லதாவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார்கள் மீது கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஹெலன் லதாவுக்காக ஆஜரான வக்கீல் கிறிஸ்டோபர் ஜோபி (52) என்பவர் தாக்கப்பட்டதா கவும் போலீசில் புகார் கூறப் பட்டுள்ளது. தக்கலை அருகே உள்ள சரல்வி ளையைச் சேர்ந்த இவர், மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் சென்ற போது, சேவியர் உள்பட 4 பேர் வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி கத்தி யால் குத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த கிறிஸ்டோ பர் ஜோபி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில் கருங்கல் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.