என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
வடசேரியில் ஜெப கூடத்திற்கு வந்த பெண்ணின் 4 பவுன் நகை மாயம்
By
மாலை மலர்26 Sept 2023 12:33 PM IST

- நகை மாயமான பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை
- நகையை யாராவது பறித்து சென்றார்களா? அல்லது நகையை தவற விட்டாரா? என்பது குறித்தும் விசாரணை
நாகர்கோவில் :
தக்கலை அருகே அப்பட்டுவிளை சுபாஷ் நகரை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மனைவி மரிய நட்சத்திரம் (வயது 73).
இவர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜெப கூடத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். ஜெப கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை காண வில்லை.
இதையடுத்து மரிய நட்சத்திரம் நகையை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் நகை கிடைக்கவில்லை. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
நகை மாயமான பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மரிய நட்சத்திரத்திடம் நகையை யாராவது பறித்து சென்றார்களா? அல்லது நகையை தவற விட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
X