search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரைவில் குமரி மாவட்டத்தில் விமான நிலையம் - மத்திய மந்திரி வி.கே.சிங் உறுதி
    X

    விரைவில் குமரி மாவட்டத்தில் விமான நிலையம் - மத்திய மந்திரி வி.கே.சிங் உறுதி

    • மீண்டும் மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்
    • டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்வதில் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் ெரயில்வே கிராசிங் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்தப் பணியை மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் இன்று ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே அதிகாரிகளிடம், சுரங்கப்பாதை பணிகள் எப்போது முடியும் என கேட்டார்.

    அதற்கு அதிகாரிகள் தரப்பில், சுரங்கப்பாதை பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் பணியை முடிக்க ஆறு மாதம் எடுத்துக் கொள்ளாமல் விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய மந்திரி வி.கே.சிங் உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த மாவட்டமாகும். இங்கு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். எனவே விமான நிலையம் அமைத்தால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே கன்னியாகு மரியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாமிதோப்பு பகுதியில் இடமும் தேர்வு செய்யப்பட்டது.

    ஆனால் சில காரணங்களால் விமான நிலையம் அமைக்கும் திட்டம் நிலுவையில் இருந்தது. ஆனால் தற்போது விமான நிலையம் கன்னி யாகுமரி மாவட்டத்தில் அமைப்பது தொடர்பாக மீண்டும் மத்திய அதிகாரிகள் குழு வருகை தந்து ஆய்வு செய்வார்கள்.

    அவர்களின் அறிக்கையின்படி விமான நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு அமைப்பது என முடிவு செய்யப்படும்.

    நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலும் நான்கு வழி சாலை பணிகள் வருகிற ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இதற்காக ரூ.1,041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை 2 வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாகர்கோவில்- திருவனந்தபுரம் இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக சில நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்த பணி 2 முதல் 2½ வருடத்திற்குள் முடிக்கப்படும்.

    கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் 55 சதவீதம் வந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் ஜெர்மனியை பெண்ணுக்கு தள்ளி 4-வது இடத்தை இந்தியா அடையும். உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்வதில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், துணைத் தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பம், கோட்டார் ரெயில்வே மேலாளர் முத்து மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×