என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே ரெயில் முன் பாய்ந்து மின்வாரிய ஊழியர் தற்கொலை

- ராமேஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
நாகர்கோவில் :
நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் முருகப்பெருமாள் (வயது 49).
இவர் ஆவரைகுளம் பெருங்குடி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து முருகப்பெருமாள் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தார். அவர் ஆரல்வாய்மொழிக்கும் பணகுடிக்கும் இடையே ரெயில்வே தண்டவாளம் அருகே முருகப்பெருமாள் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ராமேஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகபெருமாள் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். முருகப்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. பலியான முருக பெருமாள் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு உள்ளனர். மின்வாரிய ஊழியர் ரெயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.