search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடக்கு தாமரைகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த முதியவர்
    X

    வடக்கு தாமரைகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த முதியவர்

    • 2 மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பழனி மட்டும் தனிமையாக வசித்து வந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்தாமரைகுளம் :

    ஈத்தங்காடு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் கீழத் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 85). இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பழனி மட்டும் தனிமையாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், அவரது மகன் முருகசுந்தரத்துக்கு தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு கழிவறை அருகே பழனி இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து முருகசுந்தரம், தென்தாமரைக்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனியின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வயது முதிர்வு காரணமாக அவர் இறந்துள்ளதாக முருகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×