என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் உண்ணாவிரத போராட்டம்
- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வட மாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. தினக்கூலி தொழிலா ளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்கம் மாசானம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேர்மன் சகாயராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, சி.ஐ.டி.யு.சக்திவேல், ஏ.ஐ.டி.யூ.சி. இசக்கிமுத்து, நகர பொருளாளர் சுயம்புலிங்கம், கச்சேரி நாகராஜன், சங்கரலிங்கம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.