என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை தாக்க முயற்சி
- மாணவனின் தாயார் உள்பட 2 பேர் மீது வழக்கு
- சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
பள்ளியில் அவர் சரிவர படிக்காததையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவனை தனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறினார். ஆனால் மாணவன் பெற்றோரை அழைத்து செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது மாணவனிடம் பெற்றோரை ஏன் அழைத்து வரவில்லை என்று ஆசிரியை கேட்டுள்ளார்.
உடனே மாணவன் அங்கிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. பின்னர் மாணவனின் தாயாரும், வாலிபர் ஒருவரும் பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் உள்ள முதல்வர் அறைக்கு வந்த அவர்கள் ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென மாணவரின் தாயார் தான் காலில் கிடந்த செருப்பால் ஆசிரியையை அடிக்க முயன்றார்.
அவருடன் இருந்த வாலிபர் ஸ்குருடிரை வரை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் மாணவனின் தாயார் வாலிபரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியை வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவனின் தாயார் மற்றும் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 448, 294 (பி), 352, 506 (2) ஐ.பி.சி. மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாணவரின் தாயாரையும், வாலிபரையும் பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டுள் ளனர். போலீ சார் தேடுவது அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள வாலிபர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ஒருவரை மாணவனின் தாயார் தாக்கமுயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.