என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் இன்று நிர்வாகிகள் வீட்டில் பாரதிய ஜனதா கொடியேற்றம்
- 100 நாட்களில் 10,000 கொடி கம்பம் நடப்பட்டு பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும்
- மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களிலும் இன்று பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது
நாகர்கோவில் :
சென்னையில் அண்ணா மலை தங்கி இருந்த வீட்டில் நடப்பட்டு இருந்த பா.ஜனதா கொடிக்கம்பத்தை போலீ சார் அகற்றினர்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10,000 கொடி கம்பம் நடப்பட்டு பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன் படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கொடி கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் பொது இடங்களில் கொடி யேற்றுவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களில் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கொடி ஏற்றப்படும் என்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் கூறியிருந்தார். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் இன்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் வீட்டில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.
ஊட்டுவாழ் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். மாநில செயலா ளர் மீனா தேவ், மாவட்ட துணைத் தலைவர் தேவ், கவுன்சிலர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதர், சந்திர சேகர், அனுசுயா, அஜித், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.
இதே போல் மூவேந்த நகர் பகுதியில் மாநில செயலாளர் மீனாதேவ் கொடியேற்றி வைத்தார். கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் பா.ஜனதா நிர்வாகிகள் கொடி ஏற்றி வைத்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களிலும் இன்று பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.