என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![இன்று பிறந்தநாள் - மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு இன்று பிறந்தநாள் - மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/06/12/1710934-6.jpg)
இன்று பிறந்தநாள் - மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கலெக்டர் அரவிந்த் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவிப்பு
- அனைத்து கட்சியினரும் மாலை அணிவிப்பு
நாகர்கோவில் :
மார்ஷல் நேசமணியின் பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வேப்ப மூட்டில் உள்ள மணிமண்ட பத்தில் அவரது சிலைக்கு கலெக்டர் அரவிந்த் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திள்ளை செல்வம், மீனவர் அணி முன்னாள் அமைப்பாளர் பசலியான், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், மார்ஷல் நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை யில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் வேல்தாஸ், மற்றும் ஜெயசீலன், அக்ஷயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில நிர்வாகிகள் குரூஸ் திவாகர், நட்சத்திர வெற்றி, எட்வின் செல்வராஜ், கணேசன், அவைத்தலைவர் புளியடி பால்ராஜ், பொருளாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், செண்பக வள்ளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ராஜபாண்டி, குமரன், பால்அகியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.