என் மலர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- மன அழுத்தம் காரணமாக ராதாகிருஷ்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
இரணியல் :
இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 53), தொழிலாளி. இவரது மனைவி திருவனந்தபுரத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். மகன் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் ராதாகிரு ஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டிற்குள் சென்ற போலீசார், படுக்கை அறையில் பார்த்தபோது கட்டிலில் ராதாகிருஷ்ணன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு மது பாட்டில்களும் கிடந்தன.ராதாகிருஷ்ணன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாக ராதாகிருஷ்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போ லீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.