என் மலர்
உள்ளூர் செய்திகள்
அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் தீயில் கருகி பி.எஸ்.என்.எல். ஊழியர் பலியானது எப்படி? - போலீசார் தீவிர விசாரணை
- ஆண் ஒருவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது
- பிரசன்னகுமாருக்கு பிந்து என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் அரு மனை அருகே உள்ள மஞ்சாலுமூடுவை அடுத்த தாணி மூடு பகுதியில் தனி யாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. நேற்று இந்தப் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
அந்த வழியாக சென்றவர்கள் புகை மூட்டம் வந்த பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு ஆண் ஒருவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அருமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்து கிடந்தவர் மஞ்சாலுமூடு அருகே உள்ள மாலைக்கோடு சிறக்கரை பகுதியை சேர்ந்த பிரசன்ன குமார் (வயது 63) என்பதும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் இறந்து கிடந்த ரப்பர் தோட்டம் அவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் தீப்பிடித்ததால் அதை அணைக்க சென்ற போது தவறி விழுந்து பிரசன்ன குமார் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
பிரசன்னகுமாருக்கு பிந்து என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.