என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
- ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
- கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாணவ மாணவிகள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி தொடங்கி வைத்தார். பேரணியில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கே ற்றனர். பேரணியில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பலகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்பு ணர்வு பேரணி டதி பள்ளி, எஸ்.எல்.பி.பள்ளி, வேப்பமூடு, அண்ணாபஸ் நிலையம் வழியாக கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் நாதஸ்வரம் முழங்க மாணவிகள் பேரணியாக வந்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி, ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துணை இயக்குனர் கற்பகவல்லி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாணவ மாணவிகள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.