search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அனைத்து துறையினரும் போதைப்பொருள் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் - கலெக்டர் அரவிந்த் உத்தரவு
    X

    குமரி மாவட்டத்தில் அனைத்து துறையினரும் போதைப்பொருள் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் - கலெக்டர் அரவிந்த் உத்தரவு

    • கடலோர காவல்துறை மீன்வளத்துறை உதவி இயக்குநர் இணைந்து ஒவ்வொரு வாரமும் கடற்கரையில் ரோந்து பணி
    • பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி அமைந்துள்ள கடைகளில் சிகரெட், புகையிலை போன்ற நச்சுத்தன்மை உடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தீவிரமாக கண்காணித்து அபராதம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் போதை பொருட் கள் தடுப்பு மற்றும் விழிப் புணர்வு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் குமரி மாவட்ட கலெக்டர் அர விந்த் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னி லையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்கவேண்டிய தொலைபேசி எண்:70103 63173 வெளியிடப்பட்டது.

    மாதந்தோறும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே போதை பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கடலோர காவல்துறை மீன்வளத்துறை உதவி இயக்குநர் இணைந்து ஒவ்வொரு வாரமும் கடற்கரையில் ரோந்து பணி மேற்கொண்டு போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை கண் காணிக்க வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விளக் கப்பட்டது.

    அனைத்து தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி விபரமும் ஒட்டப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத் தில் அனைத்து துறை அரசு துறையினரும் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண் டுமென கலெக்டர் தெரி வித்தார். மருந்தகங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் நோயாளிகளுக்கு பயன்ப டுத்தப்படும் மருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக கொள்முதல் செய்யும் மருந்தகங்களை தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சட்டப் பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என வும் கலெக்டர் தெரி வித்தார்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி அமைந்துள்ள கடைகளில் சிகரெட், புகையிலை போன்ற நச்சுத்தன்மை உடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தீவிரமாக கண்காணித்து அபராதம் விதித்து நடவ டிக்கைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார். மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம அளவி லான கூட்டங்கள் நடைபெ றும்போது கூட்டங்களில் போதை தடுப்பு தொடர் பான விழிப்புணர்வை ஏற்ப டுத்தமாறு சமூக நலத்துறை, குழந்தைகள் நல அலுவல ருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) வீரா சாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×