என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் 5 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளதை, ஒப்பந்தத்தினை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றியதை, பணப்பலன்கள் வழங்கப்படாததை கண்டித்து நடக்கிறது.
நாகர்கோவில்:
அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் 5 சதவீதம் என அறிவிக்கப் பட்டுள்ளதை கண்டித்தும், 3 ஆண் டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் களின் நலன் கருதி போடப்படும் ஒப்பந்தத்தினை 4 ஆண் டுகளுக்கு ஒரு முறை என மாற்றியதை கண் டித்தும், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிைலப்படி மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படாததை கண்டித்தும் நாகர்கோவில் மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சார்பில் மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக நாளை (3-ந் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டம் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைைமயில் நடை பெறுகிறது. நான் (தளவாய் சுந்தரம்) அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சமால், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் ஆகிேயார் பங்கேற்று பேசுகின்றனர். கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா பீட்டர், நாகர்கோவில் மண்டல போக்குவரத்து பிரிவு அண் ணா தொழிற்சங்க தலைவர் சந்தனராஜ் ஆகிேயார் முன்னிலை வகிக்கிறார்கள்.
நாகர்கோவில் மண் டல போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் வரவேற்று பேசுகிறார். நாகர்கோவில் மண்டல போக்கு வரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறுகிறார். ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் மண்டல போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், பணிமனை நிர்வாகிகள், அண் ணா தொழிற்சங்க உறுப்பினர்கள், குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர், கிளை நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க சார்பு அணி நிர்வாகிகள் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.