search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல், இரணியல் பகுதியில் காவடி கட்டி தயாராகும் முருக பக்தர்கள் - திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்
    X

    குளச்சல், இரணியல் பகுதியில் காவடி கட்டி தயாராகும் முருக பக்தர்கள் - திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்

    • முத்தாரம்மன் கோவிலில் 49-வது வருட காவடி கட்டு விழா நடக்கிறது
    • காவடி கட்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட கோவில்கள் களைக்கட்டி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    முருக கடவுளின் 2-வது அறுபடை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் முருக பக்தர்கள் காவடி கட்டி செல்வது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி கட்டி தயாராகி வருகின்றனர்.

    குளச்சல் பகுதியில் புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோவிலில் 49-வது வருட காவடி கட்டு விழா நடக்கிறது. இதுபோல் சாம்பசிவபுரம் சிவன் மற்றும் துர்கா தேவி கோவிலில் தூக்க பறக்கும் காவடி, புஷ்ப காவடி, சாஸ்தான்கரை தெற்கு கள்ளியடைப்பு வீரபத்ர காளியம்மன் கோவிலில் புஷ்ப காவடி, 6 அடி வேல் காவடி, பறக்கும் காவடி, பாறக்கடை மகாதேவர் கோவிலில் பறக்கும் காவடி, புஷ்ப காவடி, மாதனாவிளை ஸ்ரீமன் பத்மநாப சுவாமி கோவிலில் எண்ணை காவடி, மேலத்தெரு தேசிக விநாயகர் கோவிலில் எண்ணை காவடி, கீழத்தெரு இசக்கியம்மன் கோவிலில் எண்ணை காவடி, வெள்ளங்கட்டி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் எண்ணை காவடி, இரும்பிலி கோவில்விளை அம்மன் கோயிலில் எண்ணை காவடி, சன்னதி தெரு முத்தாரம்மன் கோவிலில் பறக்கும் காவடி, எண்ணை காவடி, பள்ளிவிளாகம் உஜ்ஜையினி மாகாளி கோவிலில் புஷ்ப காவடி ஆகிய காவடிகள் கட்டப்பட்டு திருச்செந்தூர் புறப்பட்டு செல்கிறது.

    நாளை இரவு இந்த காவடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, சனிக்கிழமை காலை மற்றும் பகல் வேளையில் ஊரில் திரு வீதி உலா செல்கிறது.

    மாலை அனைத்து காவடிகளும் குளச்சல் ஆலடி அதிசய நாகர் ஆலயம் சந்திப்பு வந்தடைந்து, திங்கள்நகர், நாகர்கோவில், ஆரல்வாய் மொழி, முப்பந்தல் வழியாக திருச்செந்தூர் சென்றடைகிறது. காவடி கட்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட கோவில்கள் களைக்கட்டி காணப்படு கிறது.

    Next Story
    ×