என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியபோது எடுத்த படம்
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நாளை நாகர்கோவில் தபால் நிலையம் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்

- நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அறிக்கை
- நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
நாகர்கோவில்:
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பான இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயருமான மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாநகரச் செயலாளர் ஆனந்த், இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து கிழக்கு மாவட்ட செய லாளரும் மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளைச்செயலா ளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.