search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு  மோட்டார் சைக்கிள் பேரணி
    X

    குமரி மாவட்ட போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

    • குளச்சலில் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குளச்சல் சப்-டிவிசன் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    கன்னியாகுமரி:

    மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளிடையே போதை எதிர்ப்பு பிரசாரமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவுப்படி குளச்சல் சப் - டிவிசன் சார்பில் போதை எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு நடந்தது. குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி உடையார்விளை, லட்சுமிபுரம், செட்டியார் மடம், திங்கள்நகர் வழியாக இரணியல் போலீஸ் நிலையம் சென்றடைந்தது.இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியன் பெஞ்சமின், சப் - இன்ஸ் பெக்டர்கள் சுரேஷ்குமார், பாலசெல்வன், குருநாதன் மற்றும் மகளிர் போலீசார் உள்பட குளச்சல் சப்-டிவி சன் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×