என் மலர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டை இணைத்த முதல் 1000 பேருக்கு மின்னணு சான்றிதழ்
- மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
- வாக்காளர்கள் தாமாக முன்வந்து இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
நாகர்கோவில்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின் படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மை யாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்கா ளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக் கும் பணி 01.08.2022 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி , கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் ( VHA ) என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6B-யில் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவ லர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத்தினை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்ப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்த பதிவு எண்ணை (Reference Number) https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் மாவட்ட அளவில் பதிவு செய்யும் முதல் 1000 நபர்களுக்கு மின்னணு சான்றிதழ்கள் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.
எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.