search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் திருவிழா - 9-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
    X

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் திருவிழா - 9-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது

    • 2-ம் நாள் திருவிழாவான 10-ந்தேதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி
    • இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடக்கிறது. 8-ம் நாள் திருவிழா வான16-ந்தேதிநடைபெறும் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மையானது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவதுவழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 9- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடை பெறுகிறது. தொடர்ந்து காலை 8மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணி ரசல்ராஜ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.2-ம் நாள் திருவிழாவான 10-ந்தேதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலியும் நடக்கிறது.

    இந்தநிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். கோட்டாறு வட்டார முதல்வர் அருட் பணி ஆனந்த் மறை உரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    7-ம் நாள் விழாவான 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலிக்கு கன்னியாகுமரி வட்டார முதல்வர் அருட்பணி எஸ்.பி.ஜான்சன் தலைமை தாங்குகிறார். புதுக்கிராமம் பங்குத்தந்தை அருட்பணி நியூமன் மறையுறை ஆற்றுகிறார்.

    இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடக்கிறது. 8-ம் நாள் திருவிழா வான16-ந்தேதிநடைபெறும் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலிக்கு ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். திட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி சஜு மறை வுரையாற்றுகிறார். 9-ம் நாள் திருவிழாவான 17-ந்தேதி அஞ்சுகூட்டு விளைபங்குஇறைமக்கள்சிறப்பிக்கின்றனர்.

    காலை10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. கீழமணக்குடி பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி பிரபு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையும் நிகழ்த்து கிறார். மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடைக்கிறது. திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி லியோன் எஸ். கென்சன் தலைமை தாங்குகிறார். மயிலாடி பங்குத்தந்தை அருட்பணி சைமன் மறையுறை ஆற்றுகிறார். தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து சூசையப்பர் தேர் பவனி நடக்கிறது.10-ம் நாள் திருவிழாவான18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு திரு விழா நிறைவு திருப்பலி அருட்பணி சுவக்கின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மில்லர் மறைவுரை ஆற்றுகிறார்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலியை அருட்பணி ஆன்சல் ஆன்றனி நிகழ்த்து கிறார். கன்னியா குமரி புனித ஜோசப் கலசான்ஸ் பள்ளி முதல்வர் அருட்பணி ஜீன்ஸ் மறைவுரையாற்றுகிறார்.தொடர்ந்து காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசை யப்பர்ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.

    இந்த தேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்கின்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பதியை கலசான்ஸ் மழலையர் பள்ளி பொறுப்பா ளர் அருட்பணி ஜில்லோ வர்கீஸ் நடத்துகிறார். புனித ஜோசப் கலசான் குழும அதிபர் ஆல்பர்ட் கிளீஸ்டஸ் மறை உரையாற்றுகிறார்.

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடசேரி பங்கு தந்தை அருட்பணி புருணோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா வுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர்ஆன்றனிஅல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச் செயலாளர் வினோ மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவையினர் அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×