என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்
- விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
- நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் ஊர்வல நிகழ்ச்சி புல்லூர் பகவதி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கியது. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துக்கு இந்து மகா சபா நிர்வாகிகளும், காங்கிரஸ் நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு ஊர்வலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் விஜயகுமார், குளப்புறம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில், மெதுகும்மல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், நடைக்காவு பஞ்சாயத்து தலைவர் கிறிஸ்டல்ஜாண், நடைக்காவு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெக்கின்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், முன்னாள் வட்டார தலைவர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.