என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் ஒட்டலில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
- ஓட்டலை சுத்தம் செய்த போது 5 பவுன் தங்க நகை கீழே கிடந்தது
- நேர்மையுடன் செயல்பட்ட பெண் ஊழியருக்கு பாராட்டு
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஜவகர் தெருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 28-ம் தேதி ஒரு குடும்பத்தினர் சாப்பிட வந்தனர். அவர்கள் சென்ற பின்னர் ஓட்டலை சுத்தம் செய்த போது 5 பவுன் தங்க நகை கீழே கிடந்தது.
இதை பார்த்த ஓட்டல் பெண் ஊழியர், நகையை எடுத்து உரிமையாளர் சேகரிடம் கொடுத்தார். அவரும் வக்கீல் ஹரிகுமாரும் அந்த நகையை நேசமணி நகர் போலீசில் ஒப்படை த்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் மேல ராமன்புதூரை சேர்ந்த கோபிநாதன் (வயது 75) என்பவர் தான் குடும்பத்தோடு ஓட்டலில் சாப்பிட வந்தபோது நகையை தவறவிட்டவர் என தெரியவந்தது.
அவர் உரிய ஆதாரங்கள் காண்பித்ததால், இன்று நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நகையை கோபிநாதனிடம் ஒப்படைத்தார்.
மேலும் நகையை எடுத்துக் கொடுத்த ஓட்டல் உரிமையாளர் சேகருக்கும்,அவருடன் வந்த வக்கீல் ஹரிகுமாருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண் ஊழியரை சந்தித்து, கோபி நாதன் நன்றி கூறினார்.