என் மலர்
உள்ளூர் செய்திகள்
தக்கலையில் பூங்கா அமைக்க இந்து முன்னணி எதிர்ப்பு
- பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிப்பு
- கட்டுமானம் நடைபெறும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் தட்டி போர்டு ஒன்று இருந்தது
கன்னியாகுமரி :
தக்கலை அருகே, பத்ம னாபபுரம் நகராட்சிக் குட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை முன்பு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கழிவுகளை வீசி வருவதால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும்.
இந்தநிலையில் மருத்துவ மனை முன்பு பூங்கா அமைக்க சிலர் திட்டமிட்டு அதற்கான கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். கட்டுமானம் நடைபெறும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் தட்டி போர்டு ஒன்று இருந்தது. இதை கண்ட இந்து முன்னணியினர் அப்பகுதியில் கட்டுமான பணி நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மேலும் உடனடி நடவடிக்கை எடுக்க தக்கலை போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி நகர தலைவர் ரஞ்சித் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியில் இந்து முன்னணியினர் குவிந்தனர்.
தகவல் அறிந்த தக்கலை போலீசார் மற்றும் மற்றொரு சமுதாய அமைப்பினர் அங்கு வந்தனர். நகராட்சி தலைவர் அருள் சோபன், தி.மு.க. நகர செயலாளர் சுபிகான், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் வேலுதாஸ், சுரேஷ் குமார் இந்து முன்னணி செந்தில், மிசா சோமன், ரஞ்சித் உள்பட ஏராளமானோர் குவிந்தனர்.
பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் மற்றும் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் தலைமை யில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சர்வே செய்து முறையான அறிக்கை தாக்கல் செய்த பிறகு பூங்கா அமைப்பது குறித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது. அந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் பேரி கார்டு
அமைத்து போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.