என் மலர்
உள்ளூர் செய்திகள்
கருங்கலில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
- காமராஜர் திருஉருவ சிலைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
கர்மவீரர் பெருந்த லைவர் காமராஜர் அவர்களின் 121 - வது பிறந்தநாளை முன்னிட்டு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கலில் உள்ள காமராஜர் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலை வரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார்.எம்.எல்.ஏ. தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.