என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மோப்பநாய் உதவியுடன் பேச்சிப்பாறை மூங்கில் காட்டில் புலியை பிடிக்க இன்று தேடுதல் வேட்டை மோப்பநாய் உதவியுடன் பேச்சிப்பாறை மூங்கில் காட்டில் புலியை பிடிக்க இன்று தேடுதல் வேட்டை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/22/1919488-1.webp)
மோப்பநாய் உதவியுடன் பேச்சிப்பாறை மூங்கில் காட்டில் புலியை பிடிக்க இன்று தேடுதல் வேட்டை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 2 குழுக்களாக பிரிந்து சென்று வனத்துறையினர் தீவிரம்
- ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்
கன்னியாகுமரி :
சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைகல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது.
ஆடுகள், மாடுகள் மற்றும் நாய்களை கடித்து குதறி வருகிறது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
புலியை பிடிக்க கண்கா ணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டதுடன் 2 இடங்களில் கூண்டு வைத் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக புலியை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டில் புலி சிக்கவில்லை.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து அதை பிடிக்க களக்காடு முண்டந்துறையில் இருந்து டாக்டர் குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் வருகை தந்தனர். அவர்கள் நேற்று அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிலோன் காலனி பகுதி, மூக்கறைகல் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஆனால் புலி சிக்கவில்லை. இந்த நிலையில் இன்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. வன அதிகாரி இளையராஜா தலைமையில் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2 குழுக்களாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர். 2 குழுக்களிலும் 30 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.
பழங்குடி மக்கள் காட்டுப்பகுதிகளில் வழி களை அடையாளம் காட்டிக்கொடுக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பேச்சிப்பாறை மூங்கில் காடு பகுதியில் இன்று தேடும் பணி நடந்தது. வனத்துறையின் மோப்பநாய் உதவியுடன் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று மதியம் வரை புலி சிக்கவில்லை. தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து செயல்படுகிறார்கள். புலி நடமாட்டம் உள்ளதையடுத்து சிற்றாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.