என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொள்ளும் காட்சி
ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

- விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாக னங்களை பார்வையிட்டு ஆய்வு
- போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த ஆண்டு இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகள் எத்த னை பேர் கைது செய் யப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந் தார்.
பின்னர் விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாக னங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சப் இன்ஸ்பெக் டர்கள் முத்துக்குட்டி, சதீஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.