search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இணை ஆணையர் ஆய்வு
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இணை ஆணையர் ஆய்வு

    • வருகை பதிவேட்டை பார்வையிட்டு பணியாளர்கள் ஒழுங்காக பணிக்கு வந்திருக்கிறார்களா? என்று ஆய்வு
    • பணியாளர்களிடம் கோவில் வளாகத்தை தினமும் குப்பை கூளங்கள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்ற ரத்தினவேல் பாண்டியன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வருகை பதிவேட்டை பார்வையிட்டு பணியாளர்கள் ஒழுங்காக பணிக்கு வந்திருக்கிறார்களா? என்று ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்வையிட்டு சுத்தமாக பராமரிக்கிறார்களா? என்று ஆய்வு செய்தார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள கழிவு நீர் ஓடையில் குப்பைகள் குவிந்து கிடந்ததையும், துப்புரவு செய்யப்படாமல் குப்பை குளங்களாக காட்சியளித்ததையும் பார்த்து பணியாளர்களை கண்டித்தார். மேலும் அங்கு பணியில் இருந்த பணியாளர்களிடம் கோவில் வளாகத்தை தினமும் குப்பை கூளங்கள் இன்றி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×