search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா
    X

    முருகன்

    கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா

    • இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா 25-ந் தேதி தொடங்குகிறது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. விழா 31-ந் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    3-வது நாளான 27-ந் தேதி மாலை 5.30மணிக்கு விசாகத்தை முன்னிட்டு முருகன் குன்றத்தை சுற்றி 6 முறை வலம் வரும் கந்தகிரி வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.45 மணிக்கு கஞ்சி தர்மம் வழங்குதல் நடக்கிறது.

    6-வது நாளான 30-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் தேரிவிளை குண்டலில் இருந்து முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-வது நாளான 31-ந் தேதி காலை 8.45 மணிக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 11 மணிக்கு திருக்கல்யாண கோலத்துடன் இந்திர வாகனத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனையும் 12.30 மணிக்கு திருக்கல்யாண விருந்தும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×