search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான நிலையம் போன்று சர்வதேச தரத்தில் நவீன மயமாகும் கன்னியாகுமரி ரெயில் நிலையம்
    X

    விமான நிலையம் போன்று சர்வதேச தரத்தில் நவீன மயமாகும் கன்னியாகுமரி ரெயில் நிலையம்

    • மண் பரிசோதனை முடிந்து புனரமைப்பு பணி தொடங்கியது
    • ரெயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அந்த அடிப்படையில் ரெயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்ப ரியத்தை பறைசாற்றும் விதமாக நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் கட்ட மாக 50 ரெயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வ ரம், காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இதில் கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் நவீன மயமாக்கப்படுகிறது. இந்த ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம் போலும், உள்பகுதி விமான நிலையம் போன்றும் வடிவமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படுகிறது.

    மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. விசாலமான கார் பார்க்கிங் வசதி, நவீன பூங்கா, கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், பயணிகள் காத்திருக்கும் ஓய்வு அறைகள், தங்கும் விடுதி கள், கழிவறைகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மண் ஆய்வு பணி முடிவடைந்து உள்ளது. தற்போது உள்கட்ட மைப்புக்கான புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை மேம்படுத்து வதற்கான பசுமை தர பதிவு பணிகள், ஆய்வக பணிகள், தற்காலிக கழிவறையை மாற்றும் பணி, சரக்கு அணுகு சாலையை மாற்றும் பணி போன்றவை நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு, வடிவமைப்பு போன்ற பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. மாஸ்டர் பிளான் மறு சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருக்கிறது. மேப்பின் மற்றும் டோபோ கிராபிகல் சர்வே, ட்ரோன் சர்வே மரம் அகற்றுதல் போன்ற ஆரம்ப கட்ட பணிகள் முடிந்துள்ளது.

    Next Story
    ×