என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமாரகோவில் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா
- கவுன்சிலர் அய்யப்பன் கலந்து கொண்டார்
- 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்
என்.ஜி.ஓ. காலனி :
குமாரகோவில் மாளவியா கேந்ரா பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் லதாகுமாரி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பாரதிய ஜனதா பிரிவு குமரி மாவட்ட தலைவருமான அய்யப்பன் பங்கேற்று குத்து விளக்கேற்றினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் பல்வேறுபட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கியும் சிறப்பித்தார். மேலும் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்க பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தோவாளை ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம், மற்றும் பள்ளியின் எ.ஒ. ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்