என் மலர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி ஒற்றையால்விளை முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
- 21 கூட்டு பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் கட்டப்பட்டுள்ள்ன.
- 1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது.இரவு 7 மணிக்கு வாழ்த்துரங்கம்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளையில் இந்து நாடார் சமுதாய வகைக்கு பாத்தியப்பட்ட அன்னை முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்தகோவிலில் 108அடி உயர ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது தவிர இந்த கோவிலில் ராஜகோபுர வெற்றி விநாயகர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சாஸ்தா, ஸ்ரீசயனபெரு மாள், ஸ்ரீமுத்தீஸ்வரர்-முத்தாரம்மன் பலிபீடம், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீபத்ரகாளி அம்மன், வேதாளம், ஸ்ரீஉச்சினி மாகாளி அம்மன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ செங்கிடா காரசாமி, ஸ்ரீ பொற் கபால காரிஅம்மன், ஸ்ரீகருங்கிடாகாரசாமி, ஸ்ரீ உச்சிப்புலிமாயவர், ஸ்ரீ பாலமுருகன், பகடை, எட்டு கூட்டு பிள்ளை, ஸ்ரீ பெரிய பலவேசம், ஸ்ரீ சின்னபலவேசம், ஸ்ரீ முத்தாயி, ஸ்ரீசிவ சுடலைமாடசாமி, ஸ்ரீமன்ன ராஜாசுவாமிமற்றும் 21 கூட்டு பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் கட்டப்பட்டுள்ள்ன.
இந்த கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா கட ந்த31-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் அதிகாலையில் மங்கள இசையும் அதைத்தொடர்ந்து திருமுறைபாராயணமும் விசேஷ பூஜைகளும், யாக சாலை பூஜை, தீபாராதனை போன்றவை நடந்தது.மதியம் சமபந்தி விருந்து நடந்தது. பின்னர் பூர்ணாஹூதி, தபிரம்மச்சாரிய பூஜையும் யானையை வைத்து கஜ பூஜையும் குதிரையை வைத்து பூஜையும் நடந்தது.முதல் நாள்அன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் யானை மீது திருக்குடம் ஏந்தி புனித நீர் எடுத்து வந்த நிகழ்ச்சி நடந்தது.4- வது நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையும் 5 மணிக்கு திருமுறை பாராயணமும் 5-௩௦ மணிக்கு 4-வது காலயாக சாலை பூஜை, வேதிகாஅர்ச்சனை, ஜெபம், அக்னிகாரியம், மூலமந்திரஹோமம், போன் றவைகளும்நடந்தது.7மணி க்குசாந்திகலச பூஜை, நாடி சந்தானம், ஸ்பரிசாஹூதி, வஸ்திராஹூதி, மகாபூரா ணாஹூதி, உபசாரகாலம், யாத்ராதானம், கடம்புறப்பா டு போன்றவைநடந்தது.9-30 மணி முதல்10-30மணிக்குள் அன்னைஸ்ரீமுத்தாரம்மன் கோவில்ராஜ கோபுரம்மற்றும் அதன்பரிவாரமூர்த்தி களுக்குஅஷ்டபந்தனஏக காலமகாகும்பாபிஷேகம் நடந்தது.இதில்கோவை மாநகரபோலீஸ்ஆணையர் பாலகிருஷ்ணன், ஒற்றை யால்விளை ஊர் தலைவர் பாலசுந்தரம், ஆகியோர் முன்னிலையில்திருக்கை லாய பரம்பரைசெங்கோல் ஆதினம்103-வதுகுருமகா சன்னிதானம்ஸ்ரீலஸ்ரீசிவப் பிரகாசதேசியஞானபரமாச் சாரியசுவாமிகள் மற்றும் வெள்ளிமலைசுவாமிசைத ன்யானந்தஜிமகராஜ்ஆகி யோர்அருளாசி வழங்கி னார்கள்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரெமோன் மனோதங்கராஜ், தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் கழகச் செயலாளர் வைகுண்ட பெருமாள், அக ஈஸ்வரன்ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர்ஜெஸீம், ஒன்றிய கழக அவைத்தலைவர் தம்பித் தங்கம், மாதவபுரம் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பிரதிநிதி ஆர்.டி. ராஜா, பேரூர் கழக துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் குமரி சுயம்புலிங்கம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிவார்டு கவுன்சிலர்கள் நித்யா விக்னேஸ்வரி மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மணிராஜா, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சுற்றுலா வாகன நுழைவு கட்டண குத்தகைதாரர் மணிவண்ணன், ஸ்ரீ சக்தி கன்ஸ்ட்ரக்சன் அதிபர் மணிகண்டன், ஸ்ரீ ஐயப்பன் மலரகம் அதிபர்கள் ராஜா, ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர்
பகல் 12மணிக்கு தீபாராதனை நடந்தது.1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது.இரவு 7 மணிக்கு வாழ்த்துரங்கம் நடக்கிறது விழாவுக்கான ஏற்பாடுகளை ஒற்றையால் விளை ஊர் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் அன்பழகன், பொருளாளர் டாக்டர்ராஜேந்திரன்,
துணைத் தலைவர்கள் செல்வகுமார், செல்வசிவ லிங்கம், இணைச்செயலா ளர் பிரதீஸ்ராஜா, திருப்ப ணி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.