search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் ரூ.36 லட்சத்தில் லிப்ட் வசதி
    X

    நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் ரூ.36 லட்சத்தில் லிப்ட் வசதி

    • ரெயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
    • ரூ.36 லட்சத்து 71 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 பிளாட் பாரங்கள் உள்ளது. இங்கு நெருக்கடி அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக மேலும் 2 பிளாட் பாரங் களை அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் உள்ளது. மேலும் ரெயில் நிலையத்தை மேம் படுத்த அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்துவரும் நிலை யில் அந்தப் பணிகள் நிறைவு பெறும்போது ரெயில் நிலையமும் புதுப்பொலிவு பெறும்.

    இதேபோல் கன்னியா குமரி, டவுண் ரெயில் நிலை யங்களை மேம்படுத்தவும் ரெயில்வே துறை நட வடிக்கை மேற்கொண்டு உள்ளது. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக தற்போது சென்னை எழும்பூர்-கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி- திருவனந்த புரம் இண்டர்சிட்டி ரெயில், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன.

    இந்த ரெயில்களுக்கு நாகர்கோவில் டவுன் நிலை யத்தில் நிறுத்தம் வழங்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில்கள் இங்கு நின்று செல்கின்றன. மேலும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையங்களில் இருந்து கேரளா மார்க்கமாக செல்லும் சில ரெயில்களும் டவுன் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் இந்த ரெயில் நிலையத்தில் தற்போது பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் நிலையத்தில் 2 பிளாட் பாரங்கள் மட்டுமே உள்ளது. கூடுதலாக பிளாட்பாரங் களை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் முதல் பிளாட்பாரத்தில் இருந்து நடைமேடை ஏறி தான் 2-வது பிளாட்பா ரத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதை தவிர்க்கும் பொருட்டு ரெயில்வே துறை சார்பில் லிப்ட் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.36 லட்சத்து 71 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இ-டெண்டர் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பணியை 10 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    இந்த லிப்ட் பணி முடிவு பெற்றுவிட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே ரெயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக கார் பார்க்கிங் வசதி உட்பட பல்வேறு வசதிகள் அங்கு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை பொறுத்தமட்டில் இந்த ரெயில் நிலையத்தின் ஆண்டு வருவாய் ரூ.6 கோடியே 57 லட்சம் ஆகும். இந்த ரெயில் நிலையத்தை ஆண்டுக்கு 2 லட்சத்து 13 ஆயிரம் பயணிகள் சராசரி யாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பய ணிகளின் வருகை மற்றும் ரெயில் நிலையத்தின் வருவாயும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    Next Story
    ×