என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு
கன்னியாகுமரி:
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சிகளில் பஙகேற்ப தற்காக குமி மாவட்டம் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேயர் மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு வந்தார். அவரை கப்பல் போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் அங்கு இருந்து தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்கு விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து அவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விளக்கினார்கள். அப்போது விவேகானந்தர் மண்டபம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் செல்பி எடுத்துக் கொண்ட னர்.
தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர்சிலையை பார்வையிட சென்றார். அங்கு வந்து அவரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவள்ளுவர்சிலையை பார்வையிட்டார். அங்கு நடை பெற்று வரும் ரசா யன கலவை பூசும் பணியை அவர் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆரோக்கிய சஞ்சனாவை மணக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மாணவிக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அவரிடம் மேல்படிப்பு என்ன படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கேட்டார். அப்போது கலெ க்டர் ஆக ஆசைப்படுவதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர், மாணவியிடம் அவரது படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து சேனவிளையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் தொடக்கக் கல்வி துறையை தனித்துறையாக நிர்வாக ரீதியில் பிரித்து ஆணையிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.